ஜெய் ஸ்ரீ ராம்

ஓம் ஆஞ்சநேயாய நம...ஓம் மகாவீராய நம...ஓம் ராம பக்தாய நம

Monday, May 14, 2012

தமிழர்களின்- காமசூத்திரம்


தமிழர்களின்- காமசூத்திரம்



உலகெல்லாம் சிவசக்தி ரூபத்தின் வெளிபாடு...
ஆண் பெண் மனம் தேடும் புது இன்ப புறப்பாடு..
.

இருள் சூழும் நேரத்தில் மனம் ஈர்க்கும் நிலைபாடு ..
புது உயிர் தர துடிக்கும் இரு உயிரும் துடிபோடு..

காமனின் கணை தேடும் ரவிதேவி அங்கம் தேடி...
ரகசிய ராத்திரியில் ராகங்கள் பல கோடி...

உடல் கொள்ளும் வெப்பத்தில்
உதிரம் கொதிக்கும் ...உணர்ச்சிகள் வெடிக்கும் .....

அகிலம் உணர அர்த்தம் தரும் சேர்க்கை அர்த்தநாரி
ஆண் பெண் வடிவம் ஒத்த உடல் சேர முதல் படி ...



கோவிலின் சுவர் சொல்லும் காமத்தின் கலாசாரம் ...
கலையாவும் உள்ளடக்கும் கண்ணியமான நிலையாவும்....

ஆழநிலை தியானம் செய்யும் ஞானி கூட இடறி போகும் ....
ஆத்மா பந்தம் இந்த அழகான காமசூத்திரம்...

இரு உயிர் தேடும் ஒரு நிலை காமம் ......  அதில் ஏது பேதம்.





ஆண் பெண் மணநாளில் மணம் சேரும் மங்கள பொழுதில் ....

சுபயோகா நேரம்  ஒதுக்கும் உடல் சேர ராத்திரி பொழுதில் ... 
வெண்பனி போய் சேரும் சிற்ப்பிகுள் முத்தாய் ...
சிற்பியின் இமை திறக்கும் உட்கொள்ளும் நோக்காய்...

உதிரத்தின் கலப்போடு உருவாகும் புது சிறை ...
உயிர்  வாழ பெண் மடிதான் முறையான கருவறை ...



                                  இது தானே அண்டத்தின் பரம்பிரம்ம நிலையாம் .... 
                                  தெய்வீக கலையாம் ...........   

            உலக நோயாம் ஏயட்சுக்கு(AIDS-HIV)
           ஒருவனுக்கு ஒருத்தி .. என்னும் மருந்து கண்டெடுத்து
            உலகிற்கு நாகரீகம் ... கற்ப்பித்த நம் தமிழர்களின் பாதையில்
            நாமும் பயணிப்போம் ...

                                                                                                               சுந்தரகணேசன் ஐ
                                                                                                               (தமிழ் மாணவன் )

Wednesday, March 2, 2011

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’










ஆறு பலங்கள் தரும் ஆஞ்சநேயா!

மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம்.

சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன்.பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு தேவனுக்கு மகனாக பிறந்தவர். ஆகாயத்தில் பறந்து பெருங்கடலைத் தாண்டியவர். பூமாதேவியின் மகளான சீதாதேவியின் பரிபூரண அருளாசியை பெற்றவர்.

வாலில் வைக்கப்பட்ட நெருப்பையும் வசமாக்கி இலங்கையை அழித்தவர். இவ்வாறு பஞ்ச பூதங்களையும் வசப்படுத்தியவர். அதேபோல மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களையும் அடக்கியவர்.இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான். ‘‘ஆஞ்சநேயா!

உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்’’ என்றார். ‘‘கடமையை செய்துகொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்துகொள்’’ என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார்.

கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்காமல் சனி பகவான் அலறினார். ‘‘சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்துதான் இறங்க வேண்டும்’’ என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். ‘ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை’ என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.

அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று ‘ராம ராம ராம’ நாமம் சொல்வது விசேஷம். ‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும்.

இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

ஆன்ம பலம், மனபலம், புத்திபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.

Monday, February 21, 2011

ஆஞ்சநேயர்  ஸ்தோத்ரம்

அன்சிலே ஒன்று பெற்றான் அன்சிலே ஒற்றைதாவி 
அன்சிலே ஒன்றாராக ஆரியர்காக ஏகி 
அன்சிலே பெற்ற அணங்கை கண்டயலார் ஊரில் 
 அன்சிலே ஒன்றை வைத்தான் அவன் என்னை அளித்து காப்பான்

ஆபத்து தாரானோ ஹனுமத் ஸ்தோத்ரம்

அஸ்ய ஸ்ரீ ஆபத்து தாரண ஹனுமந்த் ஸ்தோத்ர மஹா மந்திரஷ்ய விபிசன ருஷி ஆபத்து தாரானோ ஹனுமத் தேவதா ஆபத்து தாரானோ ஹனுமத் பிரசாத சித்யர்த்தே ஷபே விநியோக ,

விபிஷனர் அருளிய ஆபத்து தாரானோ ஹனுமத் ஸ்தோத்ரம் .

சகல ஆபத்துகளையும் போக்க வல்லது.

Saturday, May 22, 2010

LOVE IS GOD

WE ARE ALL IS GOD